பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை * 38 இரண்டும் பெருங் கவிஞர்களின் கவிதைகளை வெளிடத் தொடங்கின. இது வரவேற்கத்தக்கது. இந்த ஆதரவுக் கரம் இன்னும் கொஞ்சம் நீள வேண்டும். பெருங்கவிஞர்கள் என்ன எழுதினாலும் வெளியிடாமல் நல்ல கவிகைகளை யார் எழுதினாலும் வெளியிட வேண்டும். இறுதியாக. என் இனிய சகோதரக் கவிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்: அருள்கூர்ந்து பண்டிகைப் பாடல்கள் எழுதுவதை நிறுத்துங்கள் இதை வைத்துத் தமிழ்க் கவிதையை மிகத் தாழ்வாக எடைபோட இடங் கொடுக்காதீர்கள்; எப்படியாவது பேர் வாங்க வேண்டுமென்று எண்ணாதீர்கள். "எனது பெயர்தமிழ் இலக்கியத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காக நான் எழுதுவது இல்லை; தமிழின் பெயர் உலக இலக்கியத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காகத் தான் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். (காமராசன் முன்னுரை) என்று எவன் சொல்லுகிறானோ சொல்லிய வாறு சாதிக்கிறானோ அவன்தான் இந்த மண்ணுக்குத் தேவை. அவன் தான் ஒரு பாப்ல்ோ நெருடாவாக மலர முடியும். - எனக்கு நம்பிக்கை இருக்கிறது..... - ஆம்! எனக்கு நம்பிக்கை இருக்கிறது; என் காலத்தில் ஒரு பாப்லோ நெருடாவை நான் இங்கும் பார்க்கத்தான் போகிறேன். நன்றி: தீபம் ஜனவரி-பிப்ரவரி, 1972