பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ மேனகை அல்ல, ஆனால் நான் விசுவாமித்திரன் நாம் பூமியின் திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்கிறோம் அன்பே அவளிடத்தில் பணக்கார வர்க்கப் பகட்டில்லை. எனினும் அவன் மயங்கிவிட்டான். இருவர்க்கும் சொர்க்கத்தைக் காண ஆசைதான். கண்டதோ திரிசங்கு சொர்க்கம். மண்ணிலும் நில்லாமல் சொர்க்கத்துக்கும் செல்லாமல் விசுவாமித்திரனால் அமைக்கப்பட்ட அந்தர சொர்க்கத்தில் நின்றவன் திரிசங்கு மன்னன்; அவனைப்போல சுகமும் இன்றித்துன்பமும் இன்றி இரண்டுங்கெட்டான் வாழ்க்கை நடத்துவோர் மத்திய தரவர்க்கத்தினர் என்பதைக் கவிஞர் நாம் பூமியின் திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்கிறோம்: என்பதில் உணர்த்தி விடுகின்றார். நாடு முழுவதும் நன்கு தெரிந்த பழைய கதைகளை நிகழ்காலத்துக்கு ஏற்றவாறு மாற்றிப் புதிதாய்ப் படைப்பதும் ஒரு வகைக் கற்பனைதான். இவ்வகையில் உதாரணமாகக் குறிப்பிடத்தக்கது அகல்யை கதை. அகலிகை மேல் இந்திரனுக்கு இருந்த மோகத்தைக் காட்டிலும் அகலிகை கதைமேல் தமிழ்க் கவிஞர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் உள்ள மோகம் அதிகம். இராமாயணத்தில் அகலிகை சாபவிமோசனம் இராமனின் தெய்வத்தன்மையை ஒளியூட்டிக்காட்டத் தீட்டப்பட் டுள்ளது. அங்கே அகலிகையின் உணர்வுகள் ஒளியூட்டப் படவில்லை. ஆனால் காலம் செல்லச் செல்லக் கவிஞர் களின் கற்பனைக் கண்ணோட்டத்தில் மாற்றம் தெரிந்தது. அகலிகைக்கு ஏற்றம் தர வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.