பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை : 44 பற்றிப் பாரதிதாசன் காலத்துக்கேற்பக் கற்பனையை அமைக்கிறார். கட்டுடலிற் சட்டை மாட்டி, கத்திரித்த முடிசீவி, பட்டுச்சிறாய் இடையணிந்து வடக்குத் தெருத் தோழர்களோடு பூப்பந்தாட்டம் விளையாடப் போகிறான் காதலன். விளையாடப் போனவன் வழக்கத்துக்கு மாறாக விரைவாக வந்துவிடுகிறான். 'நாழிகையாவதன் முன்னே நீiர் நண்ணிய தென்ன? என்று தலைவி கேட்கிறாள். "எதிரி அடித்த பூப்பந்து மட்டையில் படுவதற்குப் பதிலாக என் மலைத்தோளில் விழுந்தது; உடனே உன் நினைவு வந்தது - தாழ்குழலே அந்தப் பந்து கைக்குத் தப்பி என் தோளினைத் தாக்கி வீழ்ந்தது வந்ததுன் இன்ப மேனி நினைவு என்று அவன் பதில் சொல்கிறான். இக்காலப் பூப்பந் தாட்டத்தை வைத்து மென்மையான காதலை மேன்மைப் படுத்தும் விதத்தில் பாரதிதாசன் செய்துள்ள கற்பனையே கலையழகின் உச்சியைத் தொடுகிறது. - * மிக நவீனமான பொருள்கள் மூலம் காதலையோ பிற உணர்வுகளையோ வெளிப்படுத்துவதைப் போலவே மிகப் பழமையான புராணக் குறிப்புக்களையும் பாத்திரங்களையும் பயன்படுத்திக் கற்பனை நயம்பட எதார்த்த வாழ்க்கையைத் தீட்டும் கவிஞர்கள் ஒரு சிலரேனும் உள்ளனர். உதாரணமாக நா. காமராசனின் 'நாம் சராசரிகளைக் குறிப்பிடலாம். முதல் தேதி ஊதியம் வாங்கி மாதம் முழுவதும் வாழ்க்கை ஒட்ட வேண்டிய மத்தியதர வர்க்கத்துக் காதலன் ஒருவன் தன் காதலியிடம் சொல்வதாகக் கவிதை அமைந்துள்ளது: