பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மீரா o 43

பாடிப்பாடி அலுத்துப்போன பழைய பொருள் காதல். பசியும், பட்டினியும் வேலையின்மையும் வேறுபல பிரச்சனைகளும் நிறைந்துள்ள இந்தச்சமுதாயத்தில் வாழும் கவிஞன் ஒருவன் காதலைப்பற்றிப்பாடும்போது உனக்கு இதைத்தவிர பாடற்பொருள் வேறு இல்லையா என்று முகஞ்சுளித்துக் கேட்பார் சிலர். அப்படிப்பட்டவர்களும் காதலைப் பற்றிய பாடல்களில் வரும் காலத்துக்கொத்த கற்பனைகளையும் நவநவமான சிந்தனைகளையும் ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை. தானும் தன் காதலியும் ஒன்றுபட்டிருப்பதைப் பற்றிக் கற்பனை செய்கிறார் கம்பதாசன் - அவள் ஒரு பேராசைக்காரி. அவர் துயிலாயிருந்தால் அவள் கனவாய் வருகிறாளாம்; வில்லாய் இருந்தால் கணையாய் வருகிறாளாம். அத்தோடு போகிறாளா? பாட்டாளி மகனென யானிருந்தால் - அவள் பட்டினி வயிறென ஒட்டவராள் என்கிறார் கவிஞர். காதலியோடு சேர்ந்திருக்கும்போது வேறு சிந்தனைகளுக்கு இடமில்லை. காலை, மாலை, நண்பகல், யாமம் என்று பொழுதிடைத் தெரியினும் பொய்யே காமம் என்று பாடினான்சங்கப் புலவன். இப்படி மனம் ஒன்றி வேறு நினைவின்றி அனுபவிக்கத்தக்கது காதல். அந்தக் காதல் நினைவு பாட்டாளியைப் பிரியாத பட்டினி வயிற்றைக் கூடவே நினைக்கத் தூண்டுவது, சுவையான கற்பனை மட்டுமல்ல, வாழும் காலத்துச் சூழலை மறவாது செய்த கற்பனையுமாகும். கார்கால வரவைக் கண்டதும் தலைவியிடம் வருவதாகச் சொன்ன காலம் வந்ததே என்று நினைத்துத் தலைவன் தேரேறி வந்த காட்சியை நம் இலக்கியங்கள் சித்திரிக் கின்றன. தன் தலைவியைத் தேடி வந்த தலைவனைப்