பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை 42 லிருந்து விடுபட முடியாத பாரதிதாசன் தம் காலத்துக் கேற்பக் கற்பனை செய்ய வேண்டியவரானார். இன்றைய புதுக்கவிஞர் தமிழவனும் விண்மீன்களை வைத்து எழுதியிருக்கிளார். ஏழ்மைத் துயரத்தை எடுத்துக் காட்டும் விதத்தில், எதார்த்த நோக்கில் எழுதப்பட்ட அவர் கவிதையிலும் இலைமறைகாய்போல் கற்பனை இல்லாமல் இல்லை. இந்த இரவின் நட்சத்திரங்கள் எங்கே போச்சு? இந்த - மரத்தின் பூக்களெல்லாம் ஏன் கருகிற்று? கண்களுக்கு . இரண்டுநாள் பட்டினியை ஜீரணிக்க முடியவில்லையோ? - பட்டினி கிடந்த கண்களுக்கு நட்சத்திர இரவின் அழகும் மலர்களின் அழகும் தெரியவில்லை. பசி வந்திடில் பத்தும் பறந்து போம் என்பார்கள். பசி வந்தால் கால்கள் தள்ளாடும்; கண்கள் இருண்டுவிடும்; அதைக் கவிஞர் கற்பனைக் கண் கொண்டு பார்க்கிறார். கண்கள் பட்டினியை ஜீரணிக்க முடியவில்லையாம். பட்டினி கிடக்கிறவன் கண்களுக்குப் பட்டினியையே உணவாகக் காட்டுகிறார் கவிஞர். நல்ல கற்பனை அல்லவா? அவனோ பட்டினி. அவன் கண்களுக்கோ அpர்ணம். விண்மீன்கள் ஒவ்வொருவருக்கும் எப்படி எப்படியோ தென்பட்டன, தமிழவன் கவிதையில் அந்த விண்மீன்கள் தென்படவேயில்லை - தெரியவில்லை என்று சொல்லப் பட்டிருக்கும் விதம்தான் எதார்த்தத்தோடு கைகுலுக்கும் கற்பனை. இது காலம் தந்த கற்பனை. چ*ی. . To