பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 41 தந்தக்கோபுரத்தில் அமர்ந்து சுந்தரமயமான கற்பனை செய்யும் காலம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. இதை உறுதிப்படுத்த விண்மீன்களை வைத்துக் கவிஞர் சிலர் புனைந்த கற்பனையைக் காட்டலாம் என்று தோன்றுகிறது. பூக்கள், வைரங்கள், நிலாமகள், கோலம் போட வைத்த புள்ளிகள் என்றெல்லாம் புனைந்துரைப்பது போய் விண்மீன்களைக் கொப்புளங்கள் என்று சொல்லும் புதுமை மலர்ந்து விட்டது. சுதந்திரத்திற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பாரதிதாசனின் அழகின் சிரிப்பில் இப் புதுமையைக் காணலாம். பாரதிதாசனுக்கு முன் வேறு யாரும் அப்படிக் கற்பனை செய்யவில்லையா என்று கேட்கலாம். உண்மைதான்..... புகழேந்திப் புலவர் செய்திருக்கிறார். ஆனால் புகழேந்தியின்கற்பனைநமக்குப் பழக்கப்பட்ட கற்பனைதான். ஊரையும் உலகையும் சுடும் நிலவின் மேல் செல்லமாகக் கோபப்படும் பழைய கற்பனைதான்; தமயந்தி விரக வேதனைப்படுகிறாளாம். நெருப்பு வட்டமான இந்த நிலா என்னை மட்டுமா சுடுகிறது. அந்த வானத்தையும்தான் சுடுகிறது. பாவம் அதன் மேனியெங்கும் எவ்வளவு கொப்புளங்கள்; உண்மை தெரியாமல் அக்கொப்புளங்களை நீங்கள் விண்மீன்கள் என்கிறீர்களே என்று தோழியரைப் பார்த்துக் கேட்கிறாளாம். இப்படி புகழேந்தி சித்திரிக்கிறார். பாரதிதாசனின் கொப்புளக் கற்பனையோ வேறு விதமானது. வானம் பூமியைப் பார்க்கிறதாம்; பூமியில் பாடுபடும் பாட்டாளிகளைப் பகல் முழுதும் பார்த்துப் பார்த்து வேதனைப்படுகிறதாம். இந்த வேதனை நெருப்புத்தான் அதன் மேனியெங்கும் கொப்புளங்களை உண்டாக்கிவிட்டதாம். விண்மீனாய்க் கொப்புளித்த விரிவானம்' என்கிறார் பாரதிதாசன். - புகழேந்தி காலத்தைக் காட்டிலும் பாரதிதாசன் காலம் தொல்லைகள் சிறைப்படுத்தும் காலம். எனவே அவற்றி