பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o எதிர்காலத் தமிழ்க்கவிதை : 40 சுதந்திரம் அடைந்த பிறகு பாரதி கனவு கண்ட ஒப்பில்லாத - சமுதாயம் உருவாகவில்லை. நாகரிகமான வெள்ளையன் வெளியேறினானேயொழிய அநாகரிகம் பிடித்த வறுமை வெளியேறவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியவில்லை. ஏற்றத்தாழ்வுகள், சாதிமத வெறிகள் மறையவில்லை. அற்பக் கவலைகளுக்கும் அன்றாடச் சிக்கல்களின் தாக்குதலுக்கும் ஆளான மக்கள், வெறும் அரசியல் விடுதலை மட்டும் போதாது, சமூக பொருளாதார விடுதலையும் அவசியம் என்று கருதத் தலைப்பட்டார்கள். மக்களின் இக்கருத்து வளர்ச்சிக்கேற்ப புதுயுகக் கவிஞர்களின் பார்வையும் அமையத் தொடங்கியது. கால மாறுதலை ஒட்டிக் கவிஞர்கள் தங்கள் மனவியல்புகளை வெளிப்படுத்தும் கருவியாகக் கவிதையைக் கையாண் டனர். அதனால் கவிதையின் ஆன்மாவாயுள்ள கற்பனை யிலும் புதிய ஒளி வீசியது. கற்பனை கவிதைக் கடலில் கிடைக்கும் அமுதம்: அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகுமல்லவா? இடைக்காலத்துப் புலவர்களின் கற்பனைநூலறுந்த பட்டம் போல் கட்டுப்பாடில்லாமல் கண்டபடி சென்றதுண்டு. அதனை மிகைக் கற்பனை அல்லது போலிக் கற்பனை (Fancy) grosaurih. இன்றைய பெரும்பாலான கவிஞர்கள் போலிக் கற்பனா வாதிகளாக இல்லாமல் - தங்கள் கண்களை ஆகாயத் திலேயே மேய விடாமல் நடைமுறை வாழ்க்கையின் மேடு பள்ளங்களிலும் பாவ விடுகிறார்கள். அக்கினி புத்திரன் சொன்னதைப் போல் இது, சுந்தரச் சொற்களில் சுகிக்கும் கற்பனை தீர்ந்து வரும் காலம், தான்.