பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

©. மீரா +o 3 47 கெளதம முனிவரின் மனம் பாழ்வெளியாயிருந்தது. அவர் அவளை விட்டு விலகிப் போய் கொண்டிருந்தார் என்பதை யாருமற்ற பாழ்வெளி ஏகு கின்ற தொரு காலடி என்று கவிஞர் அடிக்கடி நினைவூட்டுகிறார். அந்தக் காலடிகள் முனிவருக்குச் சொந்தம். அந்தக் காலடிகள் ஏக வேண்டியவைதாம். அவை அவளை நெருங்குவதால் பயனொன்றும் இல்லை. ஜபதபம் செய்ய அதிகாலையில் புறப்பட்டுத் திரும்பி வந்த முனிவன் என்ன செய்கிறான்? இந்திரனையும் அகலிகையையும் சபிக்கிறான். சல்லாபச் சிறகுக்குள் சாப அம்பு உருவியது... ஏற்கெனவே அவள் இதயம் மட்டும் கல்லாய் இருந்தது; இப்போது உடலும் கல்லாகி விட்டது அவ்வளவுதான். ஒரே குற்றத்திற்கு ஒரே தண்டனை கிடைக்க வேண்டு மல்லவா? ஆணுக்கு ஒரு தண்டனை பெண்ணுக்கு ஒரு தண்டனை, பெண் விடுதலை பற்றி வாய் கிழிய இந்த சமூகம் பேசுகிறது. 'பெண்ணின் பெருந்தக்கயாவுள'... 'பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!... என்று கவிச் சொற்களைக் கேட்டுக் கிறுகிறுக்கும் பேதை களாகவே பெண்களை இன்னும் வைத்திருக்கிறது. உண்மையில் இன்னும் பெண் விடுதலை கிடைக்க வில்லை. கிடைத்துவிட்டதாகச் சில பெண்கள் கருதுவதும் ஒரு மயக்கமே! ஒரு மாயையே வெறுந் தவிப்பே! இதுவே சிற்பியின் கற்பனையில் பிறந்த அகல்யை சொல்லும் செய்தி. அண்மையில் புதுக்கவிஞர் ஞானி அகலிகையைக் கல்லிகையாக்கியுள்ளார்.