பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை : 48 ஞானியின் அகலிகை, தன் ஆன்மக் குழந்தை முதலிரவிலேயே கொன்று புதைக்கப்படுவதை எண்ணிக் குமுறுகிறாள். தன் யோகத் திறத்தை மெச்சியபடியே தாடிக் காதலியைதத் தடவிக் கொடுக்கும் முனிவனை வெறுக்கிறாள். இரும்பு உடலுடன் கரும்பு இதயத்துடன் எவனாவது வருவானா என்று காத்திருந்தபோது இந்திரன் வருகிறான். சொர்க்கம் அவளுக்குச் சொந்த மாகிறது. எனினும் அவனே அவளை நரகத்தில் தள்ளிவிட்டுத்தப்பிச் செல்கிறான். முனிவர் சபித்ததும் அஞ்சி ஒடுகிறான். அகலிகை பார்க்கிறாள். அவன் மீதும் வெறுப்புப் பிறக்கிறது. அகலிகையின் பார்வையில் இந்திரன் தெரிகிறான் அவன் நிழலில் இணைந்து நிற்கிறான் முனிவன் என்கிறார் கவிஞர். ஆம்! இந்திரன் ஒரு கோழை, முனிவன் ஒரு உணர்ச்சியற்ற கட்டை. எல்லாம் ஒன்றுதான். அவன் நிழலில் இவன் இணைவதில் என்ன ஆச்சரியம்? அவள் இருவரையும் ஒருவராய் ஏன் பார்த்தாள்? அகலிகையே காரணம் கூறுகிறாள்: ஒருவன் என்னைக் காலுக்குச் செருப்பர்க்கிக் கழற்றி எறிந்தான் மற்றவன் தோலுக்குப் போர்வையாக்கித் துர எறிந்தான் இருநாய்களும் என்னிடத்தில் எலும்பையே தேடின இதயத்தைத் தேடவில்லை புதுக்கவிதை வடிவத்தில் எழுதப்பட்ட நெடுங்கவிதை யான, இந்தக் கல்லிகை பாரதியின் பாஞ்சாலி சபதம் போல் ஒர் உள்ளுறைக் கவிதைதான் (Allegory) பாரதி பாஞ்சாலியை பாரதமாதாவாகக் கற்பனை செய்து