பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 49 படைத்துள்ளான். ஞானி அகலிகையை அடிமைப்பட்ட மனித குலமாக(Enslaved Mankind) உருவகப்படுத்துகிறார். கெளதம முனிவரையும் இந்திரனையும் அடக்கி ஆளும் வர்க்கத்தின் சார்பாளர்களாகப் படைத்துள்ளார். ஒருவன் வறட்டு இலட்சியவாதி (Mere idealist); மற்றொருவன் ஒரு கொச்சைப் பொருள் முதல் வாதி (Vulgar Materialist). உலகைக் காக்கும் உத்தமன் ஒருவனுக்காக அகலிகை கோடி மனிதர் கூட்டத்தில் தன் ஆன்ம முக்தி நோக்கிக் கொண்டிருக்கிறாள். இங்கே உலகைக் காக்கும் உத்தமன் என்பது வர்க்கமற்ற ஒருலக அமைப்பை உருவாக்கும் ஒர் இயக்கமாக (Movement) உருவகப்படுத்தப்படுகிறது. இப்படி விஞ்ஞான சோசலிச அடிப்படையில் அகல்யை கதைக்குப் புத்துயிர் அளிக்க ஞானியின் கற்பனை உதவியிருக்கிறது. 象 శస్థ• சுதந்திரத்துக்குப் பின் வந்த கவிஞர்கள் பழைய மரபுகளை மாற்றிப் புதிதாகக் கற்பனை செய்து பாடும் முயற்சியிலும் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனர். மறவன் ஒருவன் மடிய அவனைச் சார்ந்தோர் புலம்புவதாக அமைந்த பாடல்கள் கையறுநிலைத் துறையைச் சேர்ந்தனவாகும். ஆதியில் இத்துறை அரசர்களுக்கென அமைந்ததாயினும் காலப் போக்கில் இறந்தார் ஒருவரைக் குறித்த அவரோடு மனமொன்றிப் பழகியவர்கள் புலம்பிப் பாடுவதைத் தமிழ் இலக்கணமும் வழிவழி மரபும் தடை செய்ய வில்லை. இப்படி ஒருவரது இழப்பையும் இறப்பையும் எண்ணிப் பாடிய கையறுநிலை, கவிஞனின் கற்பனைக்குத் தகுந்தாற்போல் நெகிழ்ந்து கொடுக்கத் தொடங்கியது. விடுதலைக்குப் பின் வந்த புதுமைக்கவிஞர் சிலர்