பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை 50 வெவ்வேறு விதமான இழப்புக்களுக்காகவும் இத் துறையைப் பயன்படுத்திப் பாடலாயினர். காணாமற் போயினையா? என்னை விட்டுக் காதவழி போயினையா? அன்பே உன்னைப் பேணாமற் போனேனே ஐயோ இன்னும் பித்தன்போல் நின்றலறித் தவிக்கின் றேனே என்று ஒர் பெண்ணின் இழப்புக்காக வருந்துவதைப் போலத் தொடங்குகிறது. நாஞ்சில் ஆரிது இயற்றிய கவிதை ஒன்று. ஆனால் அக்கவிதை சந்தியிலாச் செந்தமிழின் சொற்றொடர்போல் தனித்தனியாய் ஆய்விட்டோம். பிரிந்து விட்டோம் சிந்தையெலாம் பொய்சுரக்க உலவுகின்றேன் திரும்பாபுே என்னருமைப் பைலட் பென் னே என்று முடியும் போதுதான் கவிஞர் பெண்ணை இழக்க வில்லை, பைலட் பேண்ாவை இழந்திருக்கிறார் என்று புரிகிறது. கவிஞரின் சோகத்தில் ஊடுருவி நிற்கும் புதிய கற்பனையழகில் நாம் மனம் பறிகொடுக்கிறோம். கண்ணதாசன் தம் 'தென்றல் பத்திரிகை நின்றபோது நெஞ்சம் உருகிப் பாடிய கவிதை ஒன்று இந்த வகையில் குறிக்கத்தக்கது. இதேபோல் பேராசிரியர் அ. சீ. ராவும், உயர்ந்தோர் ஒருவர்க்காகப் பாடப்படுவது பிள்ளைத் தமிழ்-என்னும் மரபை மாற்றிச்சாக்கடைக்கருகே சமைத்த குடிசையில் பிறந்த குப்பன்மீது பிள்ளைத் தமிழ் பாடுகிறார்; குழந்தையின் பருவ வளர்ச்சியைப் பத்தாகப் பகுத்துப் பாடும் இப்பிரபந்தத்தில் குழந்தை கை கொட்டிச் சிரிக்கும் பருவத்திற்குச் சப்பாணிப் பருவம் என்று பெயரிட்டுப் பாடுவர் புலவர். இங்குப் பருக்கைச் சோற்றுக்குப் பரிதவிக்கும் குடிப்பெருமையுடைய குப்பன் சப்பாணி கொட்டிப் பழகவேண்டிய அவசியத்தைப் பேராசிரியர் கற்பனையோடு சொல்லும் இடம் சுவையானது.