பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 51 இப்போதே பயிற்சியினில் இறங்கு மைந்தா - எழுந்தெழுந்து சப்பாணி கொட்டு குப்பா! இங்கெதற்கும் தாளம் போட்டிருப்பதற்கே ஏற்றெழுந்து சப்பான்னி கொட்டேன் அப்பா என்கிறார். பேராசிரியர் அ.சீ.ரா. அஃறிணைப் பொருள்களைப் பேச வைக்கும் ஒரு புதிய கற்பனை உத்தியை இன்றைய கவிதைகளில் நிரம்பக் காணலாம். இவ்வுத்தியில் கைதேர்ந்தவர்கள் என்று சுரதாவையும் பொன்னி வளவனையும் கூறலாம். குரங்கு, மரம் முதலிய கவிதைகள் அறுபதுகளில் பலரது கவனத்துக்கும் ஆளான கவிதைகள். நான்தான் மீன்; நாற்றஉடற் பண்டம்; தின்போர் நாக்குக்கோசுவைப்பண்டம்; பெண்ணின் கண்ணை மீன் என்று சொல்வோர்க்கு மூளையில்லை மீன் இனத்தை வலைவீசிப் பிடிக்கும் நீங்கள் ஏன் அந்த ஆண்களுக்கு வலையை வீசும் இருவிழியை மீன் என்று சொல்கின்றீர்கள் என்றும்...... ஒன்றரைக்கண் மனைவியின்கண் என்றபோதும் உவமைக்கு என்னைத்தான் குறிக்கின்றார்கள் தின்றுவிட்டுச்சும்மாவே அமர்ந்திருக்கும் திமிரினிலே என்மதிப்பைக் குறைக்கலாமா என்றும், மீன் தற்பெருமைத் தம்பட்டம் அடிப்பது சுவையாக உள்ளது. எனினும் இக்கவிதையில் இழை யோடும் நகைச்சுவையைத் தவிர வேறு குறிப்பிடத்தக்க சமூகப் பயன் எதுவும் இல்லை. அதேநேரத்தில் நெய்வேலி நிலக்கரி பேசுவதாகச் சுரதா எழுதிய கவிதை அப்பயனைத் தருகிறது. சுதந்திரத்துக்குப்பின் மண்ணுக்குள் புதைந்தி ருக்கும் கனிவளத்தை வெளிக்கொணர வேண்டும் என்னும் மக்களின் வேட்கையைக் கவிஞர் வெளிப்படுத்துகிறார்: