பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை * 52 நிலக்கரி என்றெனைப்புவியில் அழைக்கின்றார்கள் நிலக்கரிதான்; கீழ்நீரின் மனைவி நான்தான் உலகத்தில் எனை எழுப்பி விடுங்கள் உங்கள் உலகுதனைக் காட்டுங்கள் எனக்குப்; பின்னர் பல நன்மை நான் செய்வேன்; தவற மாட்டேன் பழங்காலத்துப் புலவர்கள் இயற்கை அழகைப் பாடிக் கொண்டிருந்தார்கள். இன்று நாம் இரும்பையும் எஃகையும்கூடப் பாட வேண்டும் The ancients used to like to sing about natural beauty... Today we should make poems Including iron and steel என்று ஹோ-சி-மின் சொல்லிச் சென்றார். சுரதா நிலக்கரியைப் பாடியதான் மூலம் தன்னையறியாமலே ஹோ.சி-மின் அடிச்சுவட்டில் நடந்துள்ளார் என்று தெரிகிறது. இதேபோல் 'மண் பேசுவதாக அப்துல் ரகுமான் எழுதிய கவிதையும் ஒரு பொன்னான கவிதை. 'மின்சாரத்தின் மேல் காதல் (Love for Electricity) என்று பெயர் வைத்து சோவியத் கலைஞன் நாவங் எழுதும்போது நாம் நிலக்கரியையும் மண்ணையும் பாடக்கூடாதா என்ன? 峪、 3. இன்றைய கவிதைகளில் அங்கதச் சுவை அதிகமாகவே காணப்படுகிறது. சமூகத்தில் மாசும் மறுவும் மலியும் போது அவற்றை அகற்ற மிகச் சிறந்த கவிஞர்கள் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப்போல் அங்கதம் என்னும் கவிதையுத்தியைக் கையாளுவார்கள். இதற்கு மிகுந்த கற்பனைத் திறன் வேண்டும்.