பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 53 ஒலிபெருக்கி கெஞ்சுவதாகக் கே.சி.எஸ். அருணாசலம் பாடிய பாடல் ஒன்றை இங்கே சுட்ட விரும்புகிறேன். வாக்கினால் நாட்டவர் வாழ்வையே மாற்றிடும் வசமான ஜனநாயகத்தில் ஒலிபெருக்கிக்கு நாம் தரும் மரியாதை கொஞ்சமா என்ன? ஆனால் ஒலிபெருக்கிக்கு இந்த மரியாதை வேண்டாமாம். இரண்டு கைகள்தாம் வேண்டுமாம். கைகள் இரண்டெனக்குத் தந்தருளி அடியேனைக் காப்பாற்ற வேணுமையா என்கிறது ஒலிபெருக்கி; எதற்காக இந்தக் கைகள்? மெய்மறந்து மணிக்கணக்கில் மேடைகளில் பொய் பேசும் மேதாவிக்கூட்டம் தன்னை மென்னியைத் திருகி அவர்கள் வாய் பொத்தியினி மேடையேறாத வண்ணம் செய்திடுவேன் இந்த நாட்டவர்கள் பேச்சொழிந்து - செயல்புரிய நேரமீவேன். என்று விடுதலைக்குப் பின் பேச்சுத் தொழில் வளர்ந்த பெருமையை விமர்சிப்பதுபோல் ஒலிபெருக்கி பேசுகிறது. அழகான கற்பனைதான்! இன்றைய இந்தியாவில் லஞ்சப் பேயின் நடமாட்டம் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. சம்பளம் எவ்வளவு, கிம்பளம் எவ்வளவு என்று கேட்கும் நிலைக்கு அது சமுதாயத்தில் இடம்பெற்று விட்டது. அலுவலகங் களில் ஏவலர் முதல் உயர் பணியாளர்வரை பரவியிருக்கும் இந்தத் தொத்து நோய் எமலோகம் வரை சென்று பரவி விட்டதாக ஈழத்து மஹாகவி தன் குறும்பா ஒன்றில் அங்கதச் சுவை ததும்பக் கற்பனை செய்கிறார்: முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன் - முன்னாலே வந்து நின்றர்ன் காலன்