பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை 54 சத்தமின்றி வந்தவனின் கைத் தலத்திற் பத்து முத்தைப் பொத்தி வைத்தான் போனான் முச்சூலன் கையூட்டு என்றால் மூச்சூலனும் கைநீட்டுவானாம். கையூட்டு எவ்வளவு பத்திரமாகவும் இரகசியமாகவும் நடைபெறுகிறது என்பதைக் கவிஞர் மிகக் குறும்பு கலந்து சொல்வது இப்பாட்டின் சிறப்பான அம்சம்.

  • *

சிறந்த கவிஞர்கள் ஒரிரு சொற்களிற்கூடத்தம் கற்பனையை வெளிப்படுத்தும் திறனைக் காணலாம். தமிழ்ஒளி பாடிய விதியோ வீணையோ என்ற காவியத்தில் - கணிகைமகள் என்று மாதவியைக் கோவலன் குறை கூறியதற்காக மாதவியின் தோழி வசந்தமாலை வருந்துகிறாள். கோவலன் ஒரு வணிகன் என்பதும் வணிகர்க்குப் பொருள்களை வாங்கி விற்பது வழக்கம் என்பதும் நாம் அறிந்த செய்திகள்; இங்குத் தன் தலைவியைப் பழித்ததற்காக வருந்தும் வசந்தமான்லை மாதவியிடம் வந்து கணிகைக் குலம் என்று கட்டுரைத்தார் உன்கணவர் வணிகர்குலம் என்றால் வார்ததையை விற்பதுண்டோ என்று கோபத்துடன் கேட்கிறாள். அவர் வணிகர் மகனாயிருக்கலாம். அதற்காக அவர் வார்த்தைகளை விற்கலாமா என்பது வசந்தமாலையின் வருத்தமும் வாதமும் ஆகும். வியாபார உலகத்தில் லாபத்துக்குதவும் விற்பனை கவிதையில் வேகத்துக்கு உதவும் விதத்தில் கவிஞரால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.