பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா தொழிலாளிகளுக்குத் துரோகம் செய்து காட்டிக் கொடுப்பவர்களைக் கருங்காலி என்ற சொல்லால் குறிப்பது இக்கால வழக்கு. செப்டம்பர் 13-ஆம் நாள் மகாகவி பாரதி மறைந்த நாள். கூற்றுவனைக் கூட்டிவந்த அந்த நாளைக் கருங்காலி நாள் என்கிறார் ஒரு கவிஞர் (கே.சி.எஸ்.) சாதாரணமான சொற்களுக்கும் அசாதாரண மான வலிமையேற்ற வேண்டுமென்றால் அதற்குக் கவிஞர்களின் கற்பனை ஆற்றலே காரணம். 爱 & 55 இன்றைய கவிஞர்கள் தாம் கையாளும் உவமைகளாலும் தம் கற்பனைத் திறத்தைக் காட்டுகின்றனர். நா. காமராசன் பாரதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாடிய கவிதை ஒன்றில் பாரதியின் கோலத்தை வைத்தே இந்தியா எப்படியிருந்தது என்றும் அது எப்படியிருக்க வேண்டும் என்றும் அழகான உவமைகளால் கற்பனை செய்கிறார். பாரதி அவனுடைய உடையைப்போல் நைந்துபோன இந்தியாவை ஏக்கத்தோடு பார்த்தானாம். அந்த இந்தியா அவனுடைய மீசையைப்போல் நிமிர்ந்து நிற்பது என்றைக்கோ என்று அவன் நினைத்தானாம். உவமை மட்டுமல்ல உருவகம், படிமம், குறியீடு, முரண்தொடை, விடுகதைப் போக்கு முதலிய உத்தி களைப் பயன்படுத்தி விடுதலைக்குப்பின் வந்த கவிஞர்கள் கவிதைத்துறையில் சாதனை புரிந்திருக்கிறார்கள். இச்சாதனைகளுக்கு கற்பனை எவ்வளவு தூரம் துணை புரிந்துள்ளது என்பதை உலகத்தின் ஒவ்வொரு மொழியும் வணங்கி ஏற்க வேண்டிய அப்துல் ரகுமானின் சமாதான தேவதை' என்னும் கவிதையைப் படித்தால் புரிந்து கொள்ளலாம். இன்றும்