பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை * 56 கண்ணதாசனின் குழந்தை ஒரு தொல்லை’, முடியரசனின் ஆறு', ரகுமானின் ஆறு', ரகுநாதனின் ஆறு', நா.காமராச னின் வானம்பாடி, பிச்சமூர்த்தியின் 'சினுக்கம், சிற்பியின் பாப்பாவின் க்ேள்வி', இன்குலாப்பின் 'ஒரு சேரிக்குமரி விடுகதை போடுகிறாள்', ஞானக்கூத்தனின் 'அம்மாவின் பொய்கள்', மேத்தாவின் 'மரங்கள், அபியின் இராப்பிச்சைக்காரன், தமிழன்பனின் கரும்பு", வேழ வேந்தனின் படைப்பு’, சி. மணியின் வேதனை முதலிய கவிதைகளை ஒவ்வொரு கோணத்தில் கற்பனை வளம் நிறைந்த கவிதைகளாக என்னால் கண்டுணர முடிந்தது. சுதந்திரம் பெற்ற பின் நாடு பெற்ற வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்க்கவிைைதயின் வளர்ச்சி அதிகம்தான். தமிழ்க்கவிதையில் உண்மையோடு கலந்துறவாடும் கற்பனை பெற்ற வளர்ச்சி அதனின்னும் அதிகம்தான். புதுமைப்பித்தன் இப்போது வரவேண்டும். அவரிடத்தில் 'செல்லரித்த நெஞ்சின் சிறகொடிந்த கற்பனைகள் என்று அன்றைக்குப் பாடினர்களே இன்றைக்கு என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்க வேண்டும்; இப்போது அப்படிச்சொல்லமாட்டேன் என்று அவர் பதில் சொல்ல வேண்டும். இந்த வினாடியில் இதுதான் எனக்குத் தோன்றும் கற்பனை! 4. *్మ அகில இந்திய வானொலி திருச்சி 1973