பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கவிதை - உருவகம் புதுக்கவிதைகளின் உருவத்தை காட்டுவதென்பது, புராணத்தில் வரும் மன்மதனை ஒவியத்தில் எழுதிக் காட்டுவதற்கு ஒப்பானதாகும். சிவனால் எரிக்கப்பட்ட மன்மதன் ரதி தேவியின் கண்களுக்கு மட்டுமே தென்படுவானாம். அதுபோல் இலக்கணத் தெய்வத்தின் நெற்றிக்கண் நெருப்புக்கு இரையான புதுக்கவிதையின் உருவமும் இலக்கிய ரதிதேவிகளுக்கே தென்படக்கூடும். புதுமை செய் (Make it new) என்று எஸ்ராபவுண்டு சொன்னான். இன்று, நீ நான் என்று போட்டி போட்டுக்