பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை * 58 கொண்டு போதும் போதும் என்று சொல்லும் அளவுக்குச் செய்யும் புதுக்கவிதைகளுக்கு ஏற்கனவே அங்கீகரிக்கப் பட்ட பழைய இலக்கியப் பாடல்கள் துறை, தாழிசை, விருத்தம், சிந்து, கண்ணி என்று அழைக்கப்படுவதைப் போல உருவத்தால் அமைந்த பெயர்கள் எதுவுமில்லை. இக்குறை நீங்கத் திரு.சி.கனகசபாபதி உரைப்பா, விடுநிலைப்பா, பேச்சுநிலைப்பா, குறும்பா என்று புதுக் கவிதைகளுக்குப் பெயர் சூட்டிப் பார்க்கிறார். 1934 - முதல் புதுக்கவிதை எழுதி வரும் பிச்சமூர்த்தி 'வசனத்தைக் கவிதையைப்போல் செயல்படுத்த முடியாதா? கூடாது என்ற நியதி உண்டா' என்று கேட்டுவிட்டு அவரே பதிலும் சொல்கிறார்: "இல்லை; அம்மாதிரி செயல்படும்பொழுது வசனம் தன் தொழிலை விட்டுக் கவிதையின் தொழிலை ஏற்றுக்கொண்டு விடுகிறது என்று தான் ஏற்படுகிறது. பார்வைக்கு வசனம்; உண்மையில் கவிதை. ' 'பார்வைக்குப் பசு, பாய்ந்தால் புலி' என்பதுண்டு. பிச்சமூர்த்தியோ வசனத்தில் எழுதப் பெறும் கவிதைகளை அப்படி அழைக்கிறார். பிச்சமூர்த்தியைப் பின்பற்றிப் பலரும் புதுக்கவிதை முயற்சியில் வரிந்து கட்டி இறங்கிய பிறகு கவிதையை வசனத்திலும் எழுதலாம் என்னும் கருத்து வலிமை பெற்றுவிட்டது. அச்சு இயந்திரம் கண்டு பிடிக்கப்படாத காலத்தில் - ஒலைச்சுவடிகளில் ஒன்றிரண்டு பிரதிகளே படி எடுக்கப்பட்ட காலத்தில் மறக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே எதுகைமோனையோடு கவிதை இயற்றப்பட வேண்டியிருந்தது. ஒலையிலிருந்து கல்வெட்டுக்கு மாறிய காலத்தில் மெய்கீர்த்திகள் எல்லாம் அகவல் உருவத்தில் காட்சியளிப்பதை நாம் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.