பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 59 ஜப்பானிய ஹைக்கூ'வில் எதுகை மோனையோ யாப்பு முறையோ இல்லை. சாதாரண பேச்சிலேயே எதுகையும் மோனையும் அமைந்திருப்பதால் அவை கவிதையில் அழகுணர்ச்சியை உண்டாக்கமாட்டா என்று ஜப்பானியர் ஒதுக்கிவிட்டனர். மாறாக ஐந்தசைகளும் அதையடுத்து ஏழு அசைகளும் இறுதியில் ஐந்தசைகளும் கொண்ட மூன்றடிக் கவிதையைப் படைத்தனர். யாப்புடைத்த கவிதை "கோஷா எறிந்த மங்கை' என்று ஒரு கவிஞர் குறிப்பிட்டார். கோஷாவை எறிந்து விட்டாலும் மேலாடையை எறிய முடியாதல்லவா? தமிழ்ப் புதுக்கவிதையும் எதுகை மோனையைக் களைந்தெறிந்து விட்டாலும் உணர்ச்சிக்கேற்ற ஒலிநயத்தை (Rhythm) விட்டுவிட முடியாது. கடல் அலையிலும் கால் நடை யிலும் ஒருவகை ஒலிநயம் உள்ளதே, அதேபோல் புதுக் கவிதையிலும் உயிராய் அமைந்திருப்பது ஒலிநயம்தான். நாங்கள் வெயிலைத் தாங்குவது எப்படித் தெரியுமா? வெயிலில் பொசுங்கி நாங்கள் மழைக்கு ஒதுங்குவது எப்படித் தெரியமா? மழையில் நனைந்து நாங்கள் பசியை விரட்டுவது எப்படித் தெரியுமா? பட்டினி கிடந்து. நாங்கள் நோயை ஒழிப்பது எப்படித் தெரியுமா? செத்துத் தொலைந்து. நாங்கள் யார்...... தெரியுமா? இந்தக் கவிதையைச் சாதாரணமாக படிப்பவர்களுக்கு உள்ளடக்கம் மட்டும்தான் சிறப்பாகத் தெரியும். கொஞ்சம்