பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை : 60 ஆழமாகப் பார்ப்பவர்களுக்கே தெரியுமா? தெரியுமா என்று அடுக்கப்படும் வினாவில் ஒலிநயம் ஊடுருவி நிற்பதுவும் அதுவே கவிதையின் உருவமாய் நிற்பதுவும் புரியும். ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் ஆனாலும் என் நிலவே நீ யில்லாமல் இதய வானம் இருண்டே கிடக்கின்றது. லட்சோப லட்சம் விசிறிகள்: ஆனாலும் என் தென்றலே நீயில்லாமல் ஆசைமேனி புழுங்கி வியர்க்கின்றது...... ஆனாலும் ஆனாலும், என்ற சொற்களே இக்கவிதையின் உருவத்தை அமைத்துத் தருகின்றன. குறட்பாவைப்போல் குறுகிய வரிகளில் அமைந்த புதுக் கவிதைகளைச் சிறுசிறு இலக்கியப் பத்திரிகைகளிலே பார்க்க முடிகிறது. அவற்றுள் பெரும்பாலானவை வணிக நோக்கில் வெளிவரும் பெரிய பத்திரிகைகளில் உள்ள பெட்டிச் செய்திகளைப் போலவும் துணுக்குகளைப் போலவும் உருவ அமைப்பைக் கொண்டுள்ளன. பொதுவாக அவை விகடமும் குத்தலும் வக்கிரமும் கொண்டவைகளாய்க் காணப்படுகின்றன. காளியம்மா..,... காளியம்மா..,.. ஏன் நாக்கை நீட்டுகிறாய் நான் என்ன டாக்டரா? என்ற நீலமணியின் கவிதையும் வெற்றிவிழாக் கொண்டாடிக் கொஞ்சநாள் பொறுத்துத்