பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா 89 ஒன்றிரண்டாவது தேறுகின்றன. பாராட்டும்படி அமை கின்றன. ஆனந்தவிகடன் சமீபத்தில் புதுக்கவிதைச் சிறப்பிதழ் வெளியிட்டதே - அதில் எத்தனையோ மாணவர்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது கல்லூரி மலர்களில், கையெழுத்து இதழ்களில் எல்லாம் அழகழகான சொற்கோலங்கள் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் கிப்ரானையும் விட்மனையும் மாயகாவ்ஸ்கி யையும், நெருடாவையும், தாகூரையும் படிக்கிற மாணவர்கள் தமிழிலும் சமகால இலக்கியப்போக்கை நுகர்கிற அனுபவம் கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். மன்னர்களின் காலக் கண்ணாடியான மரபுக் கவிதை ரசம் குறைந்ததாகவும் முகத்தைத் தெளிவாகப் பார்க்க உதவாததாகவும், அதே நேரத்தில் புதுக்கவிதையோ இதயத்தையே காட்டுவதாகவும் அவர்களுக்குத் தோன்றுகிறது. காரணம் அது காலத்தோடு பொருந்தியிருப்பதுதான். அணுஆயுத யுத்தத்துக்கு எதிராகக் கண்டனங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, ஆனை ஆயிரம் அமரிடை வென்றவனின் வீரதீர பராக்கிரமங்கள் அவர்களைக் கவர்வதில்லை. பங்கீட்டுக் கடை வாசலில் - வரிசையில் - மணிக் கணக்காய்த் தாயும் தங்கையும் கர்த்திருக்கும்போது 'வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள் போன்ற கவிதை வரிகள் அவர்களை ஆட்கொள்வதில்லை. சமகால நிகழ்ச்சிகளை சாமான்யர்களின் பிரச்னைகளைத் தொடுவதால் புதுக்கவிதை அவர்களை நேடியாகப் பாதிக்கிறது.