பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை 88 புதுக்கவிதைப் பரப்புநரான சி.சு.செல்லப்பா 1962இல் ‘எழுத்தில் வந்த புதுக்கவிதைகளைத் தொகுத்து ‘புதுக்குரல்கள் என்ற பெயரில் வெளியிட்டார். இந்தப் புது முயற்சிக்கு வரவேற்பு இருக்குமோ இருக்காதோ என்ற சந்தேகத்தில் 500 பிரதிகளே அச்சிட்டார். அதற்கு ஆதரவு இருந்ததாலும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, வகுப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டதாலும், 1972இல் ‘புதுக்குரல்கள் இரண்டாம் பதிப்புக் கொண்டு வர நேர்ந்ததாகவும் அந்நாலின் முன்னுரையில் குறிப்பிட் டுள்ளார். நமது பல்கலைக்கழகங்களில் நூறாண்டுகளுக்கும் மேலாக மரபுக் கவிதைகள் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. எத்தனை கவிஞர்கள் இங்கே உருவானார்கள்? ஒன்று கூறலாம், பல்கலைக் கழகங்கள் கவிஞர்களை உருவாக்க முடியாதுதான். அவை விதையாக விளங்கவேண்டாம்; நிலமாக விளங்கலாமே, கவிதைத் தரு வளர. அந்த அடிப்படையில் அணுகும்போது எத்தனை கவிஞர்கள் உருவாக உதவியிருக்கின்றன, இந்தப் பாடத் திட்டப் பழங்கவிதைகள்? கேள்வி கேட்க வசதியாக அமைந்திருக்கின்றன. அவ்வளவே. அதேசமயம் புதுக்கவிதை புகுந்து ஒன்றிரண்டு ஆண்டுகளே ஆனபோதிலும் படைப்பாற்றல் (Creativity) துலங்க வழி வகுத்திருக்கிறது. மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகத் தெரிகிறது. காரிகை கற்றல்லவா கவிபாட முடியும் என்று அஞ்சும் தயங்கும் மாணவர்கள் புதுக்கவிதை ஒன்றிரண்டைப் படித்த மாத்திரத்தில் இதுதானா புதுக்கவிதை இதோ நானும் எழுதப் போகிறேன் என்று பேனாவை எடுக்கிறார்கள். விளைவு, நாலிலே ஒன்றிரண்டு என்றில்லாவிட்டாலும் நாற்பதிலே