பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா : 87 என்றால் புதுக்கவிஞர்களுக்கு அவ்வளவு எளிதில் அங்கீகாரம் கிடைக்குமா என்ன? மதுரைப் பல்கலைக்கழகம்தான் துணிந்து முதல் முதலாக புதுக்கவிதைகளைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ஏற்றது. இது காலத்தின் கட்டாயத்தால் நிகழ்ந்தது. அதன் பெயர் 'பரிணாமம்' அல்லது 'படிப்படியான வளர்ச்சி' என்போம். அகவலும் அதற்குப் பிறகு வெண்பாவுமாக பண்டைத் தமிழ்ப் பாடல்கள் அமைந்துள்ளன. சிந்து, பள்ளு, குறவஞ்சி முதலியன வந்து தமிழ்க் கவிதையை இன்னும் எளிமையாக்கின. பாரதி வந்தார் பைந்தமிழுக்குப் புதுவாழ்வு தந்தார். பதவுரை, பொழிப்புரை தேவைப் படாத பாடல்களைப் பாடினார் (பாரதிதாசன் அதைத் தொடர்ந்தார்) எளிமைக்கு மட்டுமல்ல புதுமைக்கும் புதுக்கவிதைக்கும்கூட அதே பாரதிதான் முன்னோடியாக இருந்தார். இலக்கணம் உட்பட எல்லாமே செய்யுள் நடையில் எழுதப்பட்டகாலம் போய் இப்போது கவிதையையும் கூட வசனத்தில் எழுதலாம் என்ற மாற்றம் ஏற்பட்டு விட்டது. மாணவர்கள் தமிழ்க்கவிதையின் வளர்ச்சியைத் தொடர்ச்சியாகத் தெரிந்துகொள்ள காலம்தோறும் கவிதை வளர்ந்த நிலைமையைப் புரிந்துகொள்ள புதுக்கவிதையைப் பாடமாக வைத்தாக வேண்டிய அவசியம் நேர்ந்துவிட்டது. இது ஒரு திருப்பமே. இன்று மதுரைப் பல்கலைக்கழகத்தில் அப்துல் ரகுமான், சிற்பி, மேத்தா, காமராசன் முதலான கவிஞர்களுடைய புதுக்கவிதைகளைப் பாடத்திட்டத்தில் (பி.ஏ., எம்.ஏ., வகுப்புகளுக்கு) வைத்துள்ளார்கள்.