பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா * 91 சாவிகள்தாம் கை மாறின இது போன்றதே ஜனநாயகத்தைப் பற்றிய விமர்சனமாக அமையும் ரகுமானின் இன்னொரு கவிதை புறத்திணைச்சுயம்வர மண்டபத்தில் போலி நளன்களின் கூட்டம் கையில் மாலையுடன் குருட்டுத் தமயந்தி புதுக்கவிதை என்பது Express Telegram போன்றது. ஆம் விரைவுத் தந்திபோல் வேலை செய்யக்கூடிய சக்தி படைத்தது புதுக்கவிதை. இதுமாதிரி நாட்டைப் படம் பிடிக்கும் கவிதைகளைப் பாடமாகப் படிக்கிறவர்களுக்கு பாடம் படமாக நெஞ்சில் பதிந்து விடுவதில் ஆச்சரிய மில்லை. இது விண்வெளியுகமாக வளர்ந்துவிட்ட விஞ்ஞான யுகம். உலகின் பிற பிற பகுதிகளைப் பற்றிய அறிவு குறைவாக இருந்த காலத்திலேயே குவலய முழுமைக்கும் சேர்த்தே பாடியவர்கள் நம் புலவர்கள். இன்றைய நிலையைக் காட்டிலும் செய்திகள் தாமதமாக வந்தடைகிற அந்தக் காலத்திலேயே பாரதி பெல்ஜியத்தையும், சோவியத்தை யும் பாடவில்லையா? புதுக்கவிஞர்கள் வாழும் காலம் செய்தித் தொடர்பு வளர்ந்துவிட்டகாலம். உலகின் எங்கோ ஒரு மூலையில் நிகழ்கிற சம்பவங்கள் கவிஞனின் மூளையில் கருக்கொள்கிறது’ இல்லையெனில் மேத்தாவின் பேனாவில் இருந்து வியட்நாம் அலை வரிசையில் நீங்கள் கேட்டுவந்த வேதனைப் பாடல்களின் ஒலி பரப்பு இத்துடன் முடிவடைகிறது