பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை * 92 மீண்டும் வேறு அலை வரிசையில்.... என்று வெளிப்படுமா? ஆக புதுக்கவிஞர்களின் சமகாலப் பிரக்ஞை மாணவமணி களுக்கு உலக நடப்பையும் ஓரளவு உணர்ச்சி பூர்வமாகப் புரிந்து கொள்ள உதவுகிறது. இதைப்பற்றி வரலாற்றுப் பாடத்தில் படிக்கும்பொழுது இந்த அளவு மாணவ மணிகள் மனம் பறிகொடுப்பவர்களா என்பது சந்தேகமே. சமூகத்தில் ஏழையின் இளப்ப நிலையை ஈரோடு தமிழன்பன் இப்படிச் சொல்கிறார். பணக்காரன்தும்மலுக்குப் பதைக்கின்ற இவ்வுலகம் ஏழையின் இருமலுக்கும் ஏனென்று திரும்பாது இப்படிப்பட்ட கனமான கற்பனை வளத்திற்கு எடுத்துக் காட்டான படைப்புக்களைப் படிக்கிற மாணவர்களுக்குத் தாமும் அவற்றைப் போலப் படைக்கவேண்டும் என்னும் a-fig156b (Inspiration) o airl Täpä. இன்று எழுதும் மாணவர்கள் பலருக்கு மு. மேத்தா ஆதர்சக் கவிஞராக விளங்குகிறார். அவருடைய கண்ணிர்ப் பூக்கள் நா. காமராசனின் 'கறுப்பு மலர்கள் கவிதைகள் இன்ற மாணவர்களிடையே பாடநூலாகவும் கவிதை எழுதப் பயன்படும் பயிற்சி நூலாகவும் பிரபலமாகிவிட்டன. மாணவக் கவிஞர்களின் கவிதைகள் சின்னச் சின்னத் தொகுப்புகளாக வெளிவரத் தொடங்கிவிட்டன. இந்த வரிசையில் முதன் முதலில் வெளிவந்து எல்லோர் கவனத்தையும் ஈர்த்த நூல் ஆக்டோபஸும் நீர்ப்பூக்களும்' என்ற நூல், தமிழவன் இராமசாமி, குவேரா போன்ற