பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 93 மாணவர்களின் கவிதை ஆற்றல் அப்போது அனைவரை யும் வியக்க வைத்தது. வாணியம் பாடி இசுலாமியாக் கல்லூரி மாணவர்கள் எழுதிய கவிதைகள் அப்துல் ரகுமானின் வழிகாட்டலில் 'இலவசத்துக்கு ஒரு விலை மாயானத்திற்கு ஒரு தொட்டில் 'செவ்வந்தி ஆகிய தொகுப்புகளாக வெளிவந்தன. மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் 'மரத்தடி மகா ராஜாக்கள் உடைய கவிதைகளை 1975இல் வெளியிட்டுள்ளனர். இப்பொழுது நான்கு மாணவக் கவிஞர்கள் வெளியிட் டுள்ள நொடிகளின் உரைப்பு' என்ற நூல் கவனிக்கப்பட வேண்டிய தொகுப்பு. அதில் யுவன் எழுதிய சாபல்யம்' என்ற கவிதை இன்றைய இளைஞர்கள் உழைப்பாளர்களின் கனவுலகத்தை அழகாகச் சித்திரிக்கிறது. எதிரில் வந்த கார்க்காரன் சிந்திப்போன வசவோடு தசையின் வலு கூட்டிக் கைவண்டி ஒடும் இழுத்துப் போகிறவன் இவ்வுலகில் இல்லை பாக்யராஜும் எம்ஜியாரும் பரோட்டா மாவு மனதில் பிசைய முதுகில் சூரியன் முள்ளால் உறுத்துவான் 'பரோட்டா மாவு பிசைவது மாதிரி என்ற வரிகளில் நடப்பியல் உவமையாகவும் உண்மையாகவும் அல்லவா செயற்படுகிறது! இதே தொகுப்பில் உள்ள சோஃபியா என்ற கவிஞரின் கவிதை ஒன்று: