பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை 94 தானே கைதியாய் கை கால்களில் தளையிட்டுத் தன்னையே உள்ளே பூட்டித் தானே காவலாளியாய்க் காத்து நின்று தன் சுதந்திரத்தை தானே மெச்சும்...... கேள்விக்குறியை இக்கவிதைக்குத் தலைப்பாக்கித் தந்துள்ளார் ஆயுத எழுத்தை பேரில் வைத்துள்ள இந்தக் கவிஞர். கவிதையின் ஆற்றல் வியப்புக்குறிகளை விளைய வைக்கிறது. பூம்புகார்ப் பேரவைக் கல்லூரியில் சாயனம் படிக்கும் வெ.முத்தையன் வெளியிட்டுள்ள சிரபுஞ்சி வெயில் ஒரு நல்ல தொகுப்பு. 'மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்' என்று என்னதான் போற்றிப் புகழ்ந்தாலும் இந்த நவயுகத்திலும் பெண்ணடிமைத்தனம் ஒழியவில்லை. பெண்ணை உணர்ச்சியற்ற கல்லாய் மரமாய்க் கருதும் ஆதிக்க மனோபாவம் ஆண்களை விட்டு விலகவில்லை. தான் வளர்த்த ஆடாவது தலைதப்பும், தான் தப்ப முடியாது என்று மனம் புழுங்கும் ஒர் இளம்பெண்ணை முத்தையன் நம் எதிரில் கொண்டு வந்து நிறுத்துகிறார்! அக்காவளர்த்த ஆடு நிற்கிறது அய்யனாருக்கென்று மாலையிட்டு நீரேற்றி ஒரு நாள் கேட்டனர் குளிரில் உதறிய தலை குறிப்பாய்ச் சொல்லி விட்டதாம் 'இப்போது பூசை வேண்டாம்' அய்யனார் காத்திருக்கிறார்: அக்காவைப் பார்த்த மாப்பிள்ளையை 'விருப்பமில்லை என்றாள்