பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'உதை விழும், கழுதை உனக்கென்ன தெரியும்’ அப்பா மிரட்டலில் அக்கா ஆசைகள் அணைந்தன. துள்ளிக் குதிக்கிறது. அக்கா வளர்த்த ஆடு பாவம்! அவள் மட்டும் அழுது கொண்டிருக்கிறாள். பொறையாறுக் கல்லூரித் தமிழ் துறையினர் தங்கள் மாணவர் ஜோசப்ராஜ் என்பவரின் கவிதைகளை 'மெளனயுத்தம்’ என்ற நூலாக்கி அறிமுகம் செய்துள்ளனர். நமது நாட்டில் சிவப்பு விளக்குகளில் தான் பொதுவுடைமை பொங்கி வழிகிறது என்று கோபப்படுகிறார் ஜோசப்ராஜ். 'மீனாட்சிபுரம் கவிதை நெஞ்சில் நிலைக்கிறது. கப்பிப் பிறந்த கால இருட்டை தொப்பி யணிந்து தொலைக்கப் பிறந்த அரிசன மெக்கா இந்தப் பார்வையில் யதார்த்தம் சுடர்விடுகிறது. மலர்களை செடிகள் வயதுக்கு வந்ததும் அணியும் தாவணிகள் என்று இவர் சொல்கிறபொழுது இதழ் பிரியாமல் மனசுக்குள் புன்னகை செய்ய வேண்டியிருக்கிறது. 'பாரதி நோக்கில் பொதுவுடைமை பரந்த நோக்கில் எழுதப்பட்ட ஒரு நல்ல கவிதை: