பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை . 96 உலகக்கட்டிடத்தைக் கோணலாய்க் கட்டிய அனுபவமற்ற கொத்தனார் என்று கடவுளை ஒரு வக்கிரப் பார்வையால் படம் பிடித்துக் காட்டுகிறார். இன்றைய வளர்ச்சிக்கு கடவுளால் ஈடுகொடுக்க முடியாது என்றும் அறிவுப்பூர்வமாகச் சொல்கிறார். கொஞ்சம் பழைய பார்வைதான் என்றாலும் 'மெழுகு வர்த்தி கவிதை முழுமையான சித்திரமாய்ப் படைக்கப் பட்டுள்ளது. ஏ விதவையே அப்படியென்ன விரகதாபம் உனக்கு சேலை நழுவி இப்படி விழுகிற வரைக்கும்...... இதுபோன்ற மாணவர்கள் இளைஞர்கள் ஆகியோரின் புதுக்கவிதைகள் ஒரு புதுவகை இலக்கியமாக இளைஞர் இலக்கியம் ஆக உருவாகி வருகின்றன. - இந்தப் புதுவரவிற்கு நம் பாடத்திட்டமும் ஒரளவு பங்காற்றி யிருக்கிறது என்பதில் வியப்பும் இருக்கிறது. மகிழ்ச்சியும் இருக்கிறது. ぐ கல்லூரித் தமிழாசிரியர் கழகக் கருத்தரங்கம் பொள்ளாச்சி 23–4–1983