பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


பண்டாரத் தூது


பசுவலன் உதிப்ப தன்முன்
பண்டாரம் பூக்கொணர்ந்தான்.

புகலுவான் அவனிடத்தில்
பொன்முடி: “ஐயா, நீவிர்

சகலர்க்கும் வீடுவீடாய்ப்
பூக்கட்டி, தருகின் றீர்கள் ;

மகரளீ தியிலே உள்ள
மறை நாய்கன் வீடும் உண்டோ ?

மறைநாய்கள் பெற்ற பெண்ணாள்,
மயில்போலும் சாயல் கொண்டாள்.

நிறை மதி மூகத்தாள்; கண்கள்
நீலம் போல் பூத்திருக்கும்;

பிறைபோன்ற நெற்றி வாய்ந்தாள்;
பேச்செல்லாம் அமுதாய்ச் சாய்ப்பான்;

அறையும் அவ் வணங்கை நீவிர்
அறிவீரா? அறிவீராயின்,

14