பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேதியொன் றுரைப்பேன் யார்க்கும்
தெரியாமல் அதனை, அந்தக்

கோதைபால் நீனீர் சென்று
கூறிட ஒப்பு வீரா ?

காதை என் முகத்தில் சாய்ப்பீர்!
கையினில் வராகன் பத்துப்

போதுதுமா ?” என்று மெல்லப்
பொன்முடி புலம்பிக் கேட்டான்!

”உன் மாமன் மறைநாய்கள் தான் !
அவன் மகள் ஒருத்தி உண்டு;

தென்னம் பானை பிளந்து
சிந்திடும் சிரிப்புக் காரி !

இன்னும் கேள் அடையானத்தை;
இடை, வஞ்சிக் கொடிபோல் அச்சம் !

நன்றாகத் தெரியும் ! நானும்
பூ அளிப்பதும் உண்” டென்றான்.

”அப்பாவும் மாம னாகும்
பூனையும் எலியும் ஆவார்;

அப்பெண்ணும் நானும் மெய்யாய்
ஆவியும் உடலும் ஆனோம்!

செப்பேத்தி அவள் துறைக்குச்
செல்லுங்கால்,சென்று காண

ஒப்பினேன் ! கடைக்குப் போக
உத்தர வீட்டார் தந்தை !

15