பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இமைநோக என்னை நோக்கி
இருப்பாள் கண் திருப்ப மாட்டாள்!

சுமைக்குடம் தூக்கி அந்தச்
சுடர்க்கொடி காத்திருந்தால்,

'நமக் கென்ன என் றிருத்தல்
ஞாயமா? நீவிர் சென்றே

அமைவில் என் அசந்தர்ப்பத்தை
அவளிடம் நன்றாய்ச் சொல்லி

சந்திக்க வேறு நேரம்
தயவு செய் துரைக்கக் கேட்டு

வந்திட்டால் போதும்! என்னைக்
கடையிலே வந்து பாரும்!

சிந்தையில் தெரிவாள்; கையால்
தீண்டுங்கால் உருவம் மாறி

அந்தரம் மறைவாள்; கூவி
அழும்போதும் அதையே செய்வாள்.

வையத்தில் ஆண்டு நூறு
வாழ நான் எண்ணினாலும்

தையலை இராத்தி ரிக்குள்
சந்திக்க வில்லை யானால்,

மெய்யெங்கே? உயிர்தா னெங்கே?
வெடுக்கென்று பிரிந்து போகும்?

“உய்யவா? ஒழியவா ?” என்
றுசாவியே வருவீர் என்றான் !

16