பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டாரம் ஒப்பிச் சென்றான்
பொன்முடி பரிவாய்ப் பின்னும்

கண்டபூங் கோதை யென்னும்
கவிதையே நினைப்பாய், அன்னாள்

தண்டைக்கால் நடை நினைந்து
தான் அதுபோல் நடந்தும்,

ஒண்டொடி சிரிப்பை எண்ணி
உதடு பூத்தும் கிடப்பான்!

வலிய அங் கணைத்த தெண்ணி
மகிழ்வான்! அப்போது கீழ்ப்பால்

ஒலி கடல் நீலப் பெட்டி
உடைத்தெழுந்தது கதிர் தான் !

பல பல என விடிந்த
படியினால், வழக்க மாகப்

புலம் நோக்கிப் பசுக்கள் போகப்
பொன்முடி கடைக்குப் போனான்!

2-3558

17