பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

பெற்றோர் பெருந்துயர்

விளக்கு வைத்து நாழிகை ஒன்றாயிற்று. மீசை
வளைத்துமே லேற்றி அந்த மான நாய்கள்
                                     வந்தான்.
”அன்னம்” என்று கூவினான் அன்னோன்
                                     மனைவிதனை;
“என்ன” என்று கேட்டே எதிரில்வந்து
                                    நின்றிருந்தாள்.
"பையன் வெறிபிடித்த பாங்காய் இருக்கின்றன்!
செய்வதின்ன தென்று தெரியவில்லை. பெட்டி
                                      யண்டை
உட்கார்ந்தால் உட்கார்ந்த வண்ணமாம்.
                                  ஓலைதனைத்
தொட்டுக் கணக்கெழுதி தோதாய் விலைபேசி
வாரம் இரண்டாயினவாம். இது என்ன
கோரம்!" எனக்கூறிக் குந்தினான் பீடத்தில்!
அச்சமயம் பொன்னன் அருகில் வந்து நின்றுமே
அச்சமய மாக "ஐயா" எனக்கூவிப்,
பொன்முடியான் பூங்கோதை வீட்டுக்குப்
                                    போனதையும்,
புன்னை மரத்தடியில் கட்டிப் புடைத்ததையும்,
சொல்லி முடித்திட்டான். அன்னம் துடித்தழுதாள்.

"நல்லதுநீ போபொன்னா” என்று நவின்று, பின்,
மான் நாய்கன் தான் மனத்துயரம் தாங்காமல்
"தான தருமங்கள் நான்செய்து பெற்றபிள்ளை,

36