பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏன்என் றதட்டாமல் இன்றுவரைக் கும்சிறந்த
வானமுதம் போல வளர்த்த அருமை மகன்,
வெள்ளை உடுத்தி வெளியி லொருவன் சென்றால்
கொள்ளிக் கண் பாய்ச்சும் கொடிய உலகத்தில்

வீட்டில் அரச நலம் வேண்டுமட்டும் கொள்ளப்பா
நாட்டில் நடக்கையிலே நட்ட தலையோடு

செல்லப்பா என்று சிறக்க வளர்த்த பிள்ளை,
கொல்லைப் புறத்தில் கொடுமைபல பட்டானா"

என்று பலவாறு சொல்லி இருக்கையிலே,
நின்றெரியும் செந்தீயில் நெய்க்குடமும் சாய்ந்தது
                                         போல்,
பண்டாரம் வந்து பழிப்பதுபோல் பல்லிளிக்கக்
கண்டஅந் நாய்கள் கடிந்த மொழியாக
"நில்லாதே போ” என்றான் 'என்னால் நிகழ்ந்த
                                       தில்லை.
சொல்லென்று தங்கள்பிள்ளை சொன்னபடி
                              போய்ச்சொன்னேன்.
பூங்கோதை ஓலைதந்து போய்க்கொடு என்றான்;
                                        அதனை
வாங்கிவந்து பிள்ளை வசம்சேர்த்தேன்
                                    வேறென்ன"
என்றுரைத்தான் பண்டாரம்! கேட்டாள் இதை
                                       நாய்கன்.
"சென்றதற்குக் கூலிஎன்ன சேர்ந்த துளக்"
                                      கென்றான்,

37