பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காளை இவ் வாறு கூறக்
கனமுறு தமிழர் எல்லாம்

ஆனன்பொன் முடியின் பேச்சை
ஆதரித் தார்கள்; தங்கள்

தோளினைத் தூக்கி, அங்கை
ஒருதனி விரலால் சுட்டிக்,

கூளங்காள்! ஒருபொன் கூடக்
கொடுத்திடோம் வேள்விக் கென்றார்.

கையெலாம் துடிக்க அன்னார்
கண்சிவந் திடக் கோ பத்தீ

மெய்யெலாம் பரவ, நெஞ்சு
வெந்திடத் "தென்னாட்டார்கள்

ஐயையோ அநேக குள்ளார்
அங்கத்தால் சிங்கம் போன்றார்

ஐவர்நாம்" என நினைத்தே
அடக்கினார் எழுந்த கோபம்

வஞ்சத்தை, எதிர்கா லத்துச்
சூழ்ச்சியை, வெளிக் காட்டாமல்

நெஞ்சத்தில் வைத்துக் கொண்டு
வாயினால் நேயங்காட்டிக்,

"கொஞ்சமும் வருத்தமில்லை
கொடாததால்" என்ப தான

அஞ்சொற்கள் பேசி நல்ல
ஆசியும் கூறிப் போனார்.

56