பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னவன் செங்கோல் வாழும்,
மனுமுறை வாழும்; யாண்டும்

மன்னிய தருமம் நான்கு
மறைப் பாதத்தால் நடக்கும்;

இன்னல்கள் தீரும்; வானம்
மழைபொழிந் திருக்கும்; எல்லா

நன்மையும் பெருகும் நாங்கள்
நடத்திடும் யாகத் தாலே

ஆதலின் உழைக்கேட் கின்றோம்
அணிமுத்து வணிகர் நீவிர்,

ஈதலிற் சிறந்தீர் அன்றோ
இல்லையென் றுரைக்க மாட்டீர்!

போ தமார் முளிவ ரேனும்
பொன்னின்றி, இந் நிலத்தில்

யாதொன்றும் முடிவதில்லை
என்றனர். இதனைக் கேட்டே

பொன்முடி உரைக்க லுற்றான்;
புலமையில் மிக்கீர் நாங்கள்

தென்னாட்டார்; தமிழர், சைவர்;
சீவனை வதைப்ப தான

இன்னல்சேர் யாகந் தன்னை
யாம்ஒப்ப மாட்டோம் என்றால்

பொன்கொடுப் பதுவும் உண்டோ!
போவீர்கள் என்று சொன்னான்.