பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தருமபுரச் சந்நிதியில் இருவணிகர்.


திருமலிந்து மக்கட்குச் செம்மை பாலிக்கும்
தருமபுரம் வீற்றிருக்கும் சாந்த—குருமூர்த்தி

சீர்மாசி லாமணித் தேசிகனார் சேவடியில்
நேர்மான நாய்கள், நிதிமிக்க—ஊர்மதிக்கும்

நன்மறை நாய்கன் இருவர் பணிந்தெழுந்து
சொன்னார் தம் மக்கள் துயர்ச்சரிதம்!—அன்னார்

அருளுவார்; மெய்யன் புடையீரே, அப்பன்
திருவுள்ள நாமறியோம்! சிந்தை—உருகாதீர்!

அன்பே சிவமென் றறிந்தோன், அறியார்க்குத்!
தின்புலால் யாகச் சிறுமைதனை—நன்றுரைத்தான்

ஆதலினால் அன்னோர் அவனுயிரை மாய்த்தாரோ!
தீ தலால் வேறு தெரியாரோ!—கோதியான்

சைவநெறி ஒன்றே வடக்குச் சனங்கட்கோர்
உய்வளிப்ப தாகும் உணர்ந்திடுவீர்—மெய்யன்பீர்,

பூங்கோதை தானும் பொன்முடியும் தம்முயிரை
ஆங்கே கொடுத்தார்; அறம்விதைத்தார்!—தீங்கு

வடநாட்டில் இல்லா தொழிக்கவகை செய்தார்
கடவுள் கருணை இதுவாம்!—வடவர்,

62