பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

சு. சமுத்திரம் ☐

அநியாயத்தை நியாயப்படுத்தி, செயல்பட வைத்த பெரிய மனிதப் பேர்வழி. சம்பந்தப்பட்ட உறவினர் ஒவ்வொருவரும் அந்தத் திருமணத்தால் தனக்கு என்ன லாபம் வரும் என்று யோசித்தார்களே தவிர, சித்தியின் பாதிப்பைப் பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை. கோபத்தோடு குமுறிய என்னைப் பார்த்து பரிகாசம் செய்தார்கள். ஊரில் உள்ள பெரிய மனிதர்கள்கூட அந்தத் திருமணம் அநியாயமானது என்று தெரிந்தாலும், அதைத் தடுக்க முன்வரவில்லை. இந்தப் பின்னணியில் எழுந்ததுதான் “சோற்றுப்பட்டாளம்”. வெறுமனே ஒருத்தியை சாகடிக்காமல் சற்று முற்போக்காகக் காட்ட வேண்டும் என்பதற்காக சோற்றுப்பட்டாள நாயகி சுந்தரி, இறுதியில் பொருந்தாக் கலியாணத்தை எதிர்த்து புரட்சி செய்கிறாள். இதை அப்போது கற்பனாவாதம் என்று சொன்னார்கள். ஆனால், ஒருசில பத்தரிகைகளில், வரதட்சணை அதிகமாகக் கேட்கப்பட்டது என்பதற்காக, மேடையிலிருந்து குதித்த மணமகளையும் தாலி கட்டுவதற்கு முன்போ அல்லது பின்போ அக்னி சுற்றி வலம் வந்தபோது, மணமகனுக்கு தொழுநோய் இருப்பதைக் கண்டுபிடித்து, அந்தத் திருமணத்தை அங்கீகரிக்காத ஒரு பெண்ணைப் பற்றிய செய்தியும் வெளியாயின. “ஒரு கோட்டிற்கு வெளியே” நாவலை நான் முன்னதாக எழுதினாலும், ஆனந்தவிகடனில் தொடர் கதையாக வெளியாகி, பின்னர் பேராசிரியர் பாக்கியமுத்து அவர்களால், சி.எல்.எஸ். நிறுவனம் மூலம் முதலாவதாக வந்த நாவல் இந்தச் “சோற்றுப்பட்டாளம்”. இது பத்தாண்டுகளுக்கு முன்பு டி.வி.யில் நாடகமாக வந்தது. இன்னும் மிகச் சிறந்த நாடகமாகப் பேசப்படுகி