பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

125

நிலைய இயக்குனர் திருவேங்கடம் உட்பட பல அன்பர்கள், காட்டிய அன்பில் நெகிழ்ந்தேன். நோயின் வலிமையை குறைத்து மதித்துவிட்டேன். மஞ்சக்காமாலைதானே என்ற மெத்தனத்தில் சென்னைக்கு வந்தேன். மகாராஷ்டிர ஆளுநர் திரு. சி. சுப்ரமண்யத்தின் பேரனும், பிரபல வயிற்று நோய் நிபுணருமான திரு. பழனிச்சாமியிடம் சென்றபோது, அவர் சில பரிசோதனைகளைச் செய்யச் சொன்னார். எதிர்பார்த்ததுபோல் மஞ்சக்காமாலை 20 நாளாகியும் கூடியதே தவிர குறையவில்லை. இந்தப் பின்னணியில், எனக்கு ஆஸ்திரேலியா ஆன்டிஜீனா என்ற விஷக்கிருமியின் தாக்குதல் இருப்பதாக ஒரு சோதனை கூறியது. எனது உறவினர் டாக்டர் கலைவாணனிடம், “வெளிநாட்டுக் கிருமியப்பா” என்ற விளையாட்டாகச் சொன்னபோது, அவரோ “ஐயோ இது கான்சருக்கு ஆரம்பமாகக் கூட இருக்கலாம்” என்று உண்மையிலேயே பதறிச் சொன்னார். நான் துடித்துப் போய் விட்டேன். இறக்கப் போவது போல, உடனடியாக டாக்டர் பழனிச்சாமியிடம் சென்று, “அப்படியா” என்று கேட்டேன். அவரும் புன்முறுவல் செய்யாமல் பேசாமல் இருந்தார். “எதற்கும் ஒரு ஸ்கானிங் எடுங்கள்” என்று பட்டும் படாமலும் சொல்லிவிட்டார். அதாவது எனக்கு வந்த மஞ்சக் காமாலை கான்சரின் துவக்கமாக இருக்கலாம் என்பது மாதிரியான ஒரு அனுமானத்தைக் கொடுத்தார். எனக்கோ உடனடியாக சோதனை செய்து, அப்படியில்லை என்றாக வேண்டும் என்ற துடிப்பு. ஆனால் ஸ்கானிங் எடுப்பதற்கோ, மூன்று நாள் இடைவெளி இருந்தது. இதற்கிடையே இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த ஒரு கட்டுரையும் ஆஸ்திரேலிய கிருமி கேன்ஸரின்