பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

சு. சமுத்திரம் ☐

முதலீடு என்பதை உறுதிபடுத்தியது. நான் என்ன பாடுபட்டிருப்பேன் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையும், எழுதிய எழுத்தும், பொய்யாய், பழங்கனவாய் போனதுபோல் தெரிந்தது. வாழ்க்கையின் வரவுசெலவு கணக்கைப் போட்டுப் பார்த்தால் ஒரு வெறுமையே மிஞ்சியது. வாழ்ந்ததெல்லாம் வீண் என்பது மாதிரி; ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பிலே மரணம் பிறந்திருக்கிறது என்று தெளிவாகத் தெரிந்தபோதிலும் மனிதன் ஆடுகின்ற ஆட்டமும், (அதாவது நான்தான்) குதித்த குதியும், பரிகாசமாகத் தோன்றின. இதுவரை புரியாத ஒரு உண்மை புலப்பட்டது. மரம் செடி விழுந்தால் கூட, விறகாகும். ஆனால் மனிதன் இறந்தாலோ, ஒருபிடிச் சாம்பலாகிறான். இந்தப் பின்னணியைப் பார்க்கின்றபோது நமக்கப்பால் ஏதோ ஒரு சக்தி மட்டுமே நிரந்தரமாக நிற்கக்கூடியது என்ற எண்ணம் வந்தது. இந்த எண்ணம் எல்லோருக்கும் ஏற்படும் தான். ஆனால் மரணத்தின் கோரப்பிடியில் இருப்பதாக நினைக்கும் ஒருவருக்கு வந்தால் அது எப்படியிருக்கும் என்பதை, எழுத்தில் இயம்ப இயலாது. வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி அகவலை பல ஆண்டுகளாகப் படித்திருந்தாலும், அதன் புதிய தாத்பரியம் இந்தக் காலக்கட்டத்தில்தான் தெரிந்தது. நல்ல வேளையாக அப்படிப்பட்ட கிருமி போய்விட்டதாகவும், வயிற்றில் அத்தகைய நோய்க்குரிய (ஐயோ அதன் பெயரைச் சொல்லவே பயமாக இருக்கிறது) எதுவும் இல்லை என்றும் சோதனைகளில் தெரிந்து விட்டது. நாளாக நாளாக ஆன்மீக உணர்வு போய் “உங்களுக்கு பழையபடியும் கொழுப்பு வந்துவிட்டது” என்று என்