பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

127

மனைவி சொல்லும் அளவுக்கு, உணர்வுகள் மாறிவிட்டன. நான் திடுக்கிட்டேன். ஒருவாரத்திற்கு முன்பு இருந்த வாழ்க்கை பற்றிய அனுமானத்தை மீண்டும் மாயை வந்து பற்றிக் கொண்டதே ‘என்று பழைய உணர்வுகளுக்கு என்னை ஆட்படுத்தப் பார்த்தேன். இதிலிருந்து தெரிந்து கொண்டது, சங்கடங்கள், சஞ்சலங்கள் வரும்போது, ஒவ்வொருவரும் தனக்கு ஏற்படும் உணர்வுகளை எழுதி வைத்தால், அதுவே ஒரு காவியமாகும். நிலையற்ற வேளைக்குவேளை மாறுகின்ற மனித உணர்வுகளை, அத்தகைய டயரி, பரிகாசம் செய்து பக்குவப்படுத்தும். இந்தச் சமயத்தில் குசலம் விசாரிக்க வருவார்கள் என்று எதிர்பார்த்த சில நண்பர்கள் வரவில்லை. எதிர்பாராத சகாக்கள் வந்தார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பேராசிரியர் பாக்கியமுத்து, உடல்நலக்குறைவிலும், உச்சி வெயிலில் என்னைப் பார்த்தார். தில்லி தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர் திரு. விஸ்வநாதன், 60 வயதைத் தாண்டிவிட்டாலும் கண்தெரியாத இரவில் தட்டுத்தடுமாறி என் வீட்டிற்கு வந்தார். இந்த இரண்டு பெரியவர்களும் என்னைவிட்டுப் பிரிந்தபோது, அவர்களின் முதுகுகளையே பார்த்துக் கொண்டு, அதேசமயம், அவர்களோடு சிறிது நடந்து வழி அனுப்பமுடியாத நிலையில் இருந்த நான், அல்லோகல்லோலப் பட்டேன். எந்தவிதப் பிரதிபலனும் இல்லாத அவர்களின் தூய்மையான அன்பு, வாழ்க்கை என்பது அன்பு ஒன்றையே அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஒரு கோட்பாட்டைப் பதித்தது. நட்சத்திரங்கள் ஒன்றையொன்று