பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

சு. சமுத்திரம் ☐

ஈர்ப்பதுகூட அன்பால் தான். செடிகொடிகள் வளருவது கூட சூரியசக்தியின் அன்பால்தான். இத்தகைய அன்பு மானிடத்திடம் ஏன் அதிகமாக இல்லை என்ற ஒரு ஆய்வு நோக்கையும் ஏற்படுத்தியது.

சென்னை மயிலையில் வாழும் மாமுனிவர் குறிஞ்சி சுந்திர சாமிகளை நானும் என் துணைவியாரும் மருத்துவமனைக்குப் போய்விட்டு வரும் வழியில் பார்த்தோம். மரண விளிம்பில் இருக்கும் ஒரு நோயாளியாக அவரை நான் நோக்கினேன். காலையில் எட்டு மணிக்கு பத்மாசனம் போட்டு இரவு எட்டு மணி வரை அப்படியே அமர்ந்திருக்கும் இந்த எண்பது வயது முனிவர் எனக்கு ஆறுதல் கூறியதோடு, ஒரு எலுமிச்சம் பழத்தையும் கொடுத்து இது சுருங்கச் சுருங்க உன் நோயும் போய்விடுமென்றார். எனக்கு இது ஒரு பெரிய மனோதிடத்தைக் கொடுத்தது.

நான் படுத்து விட்டால் இலக்கிய உலகமே துடித்துப் போகும் என்று நினைத்தேன். சென்னை வானொலி நிலையச் செய்திப் பிரிவே இயங்காது என்ற மாய எண்ணம் எழுந்தது. அந்த மாதிரி எந்தப் பிரளயமும் ஏற்படவில்லை. ஒருவேளை மரித்திருந்தால் ஒரு சினிமா நடிகையின் கல்யாணச் செய்திக்குக் கீழே, ஒரு சின்னச் செய்தி வரலாம். அதுவும் எனக்கு சலுகை காட்டுவது போல்.

இந்தப் பின்னணியில், ஒரு நாவல் எழுதலாம் என்று இருக்கிறேன். ஒருவருக்கு நோய் வருவதோ, அல்லது வருவதாக அச்சுறுத்துவதோ சாதாரண சம்பவம்தான். ஆனால் சாதாரண சம்பவத்தையும், அசாதார