பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

163

பழுத்த பலா” என்ற நாவலில் உள்ளடக்கம் இன்னும் பூதாகாரமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியது. வகுப்புவாதிகளால் நடத்துவது போல் தோன்றும் கணையாழி பத்திரிகை ‘இட ஒதுக்கீடு இலக்கியத்திற்கும் வந்து விட்டது’ என்று எழுதியது. அதன் அடுத்த இதழில் ஐயருக்குப் பூணூல் இருப்பதால் விருது வருவதில்லை என்ற அர்த்தத்தில் ஒரு கடிதம் புலம்பியது. போதாக்குறைக்கு சுஜாதா என்னை வாழ்த்துவது போல் வாழ்த்தி வீழ்த்துவது போல் வீழ்த்துவதற்கு முயற்சி செய்வது போல் அதே பத்திரிகையில் ‘கமெண்ட்’ அடித்திருந்தார். இப்படி எழுத்துக்களைப் பூணூலை வைத்து அளப்பது இன்னும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், பனையேறிகளை முன்னோர்களாகக் கொண்ட நான், என் இலக்கியத்தைப் பனை நாராலேயே அளக்கிறேன். பூணூலைவிடப் பனை நார் வலுவானது.

இப்படி வகுப்புவாதம் என்மீது ஏவி விடப்பட்டாலும், என் நாவலை விமர்சிக்காமல் என்னை விமர்சிப்பது முஸ்தபா என்ற பேருக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளருக்கு ஒரு பொழுதுபோக்கானாலும், நான் ஒரு வகுப்புவாதியாகவில்லை. காரணம் ‘வேரில் பழுத்த பலா’வில் வரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சரவணன் என்ற கதாநாயகன் போலவே நானும் நடந்து கொள்ள விரும்புகிறேன். அந்தக் கதாநாயகன் இதேபோன்ற வகுப்புவாதிகளால் அல்லலுக்கு ஆளானாலும், அவன் வகுப்புவாதியாக மாறவில்லை. சந்தானம் என்ற பிராமண இளைஞனின், நியாயமற்ற வேலையையும், அதிகாரி என்ற முறையில், மனிதாபி