பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

19

டது. சற்று கட்டையான மனிதர். குஸ்தி பயில்வான் போன்ற தோற்றம். அவர் ஒரு தீப்பந்தத்தை கையில் வைத்துக் கொண்டு, சத்தம் போட்டுக் கொண்டே வந்தார். “நான்தான்டா கோட்டை மாடன். நீ எப்படிடா ஆடலாம்” என்று கத்தியபடியே வழக்கமாய் சாமியாடுபவரைத் தடுத்தார். இருவரும் கட்டிப் புரண்டார்கள். ஒருவரையொருவர், அடித்துக் கொண்டார்கள். எப்படியோ பிரித்து விடப்பட்டு இருவரும் ஆடிக் கொண்டிருந்தபோது, முதல் சாமியாடியின் சொந்தக்காரர்கள், ஏற்கெனவே ஆடுபவர்தான் ஆடவேண்டுமென்று வாதித்தார்கள். புதுச் சாமியாடியின் சொந்தக்காரர்கள், அவர்தான் ஆடவேண்டுமென்றார்கள். அடிதடி , சண்டை; எந்தச் சாமியாடி உண்மையான சாமியாடி என்று சோதித்துப் பார்க்க மனமில்லாமல், சொந்தங்களை வைத்து நிசமான சாமியை தீர்மானிக்கப் போனார்கள். புதுச்சாமி ஆள்பலம் இல்லாதவர். இறுதியில் அடித்து விரட்டப்பட்டார். நிசமான சுடலைமாடனே அங்கே வந்து “இந்த சாமியாடியிடம்தான் நான் ஆடுகிறேன்” என்று சொல்லி இருந்தாலும், மாற்றுச் சாமியாடியின் ஆட்கள், ஒரிஜினல் மாடனைக் கூட விரட்டி அடித்திருப்பார்கள். இதை வைத்து விகடனில் “சாமியாடிகள்” என்ற தலைப்பில் கதை எழுதினேன். ஏற்கனவே ஆடும் சாமியாடியை, “ஆடும் சாமியாடி” என்றும், விரட்டப்பட்ட சாமியாடியை, “ஸ்தாபன சுடலைமாடன்” என்றும் அந்தக் காலத்து அரசியல் பின்னணியில் பெயர் வைத்தேன்.

அய்யாசாமியும் - பட்டிகளும்

இந்தச் சிறுகதைகளில் அய்யாசாமி என்ற ஒரு பாத்திரத்தை அறிமுகப்படுத்தினேன். இந்தக் கதைகள் நிகழும் இடத்தை, குட்டாம்பட்டி என்று அழைத்தேன். அய்யாசாமி ஆள்பலம் இல்லாத மிதவாதி. அதாவது