பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

சு. சமுத்திரம்

வைத்திருப்பார்கள். அவர் சாப்பிடுவதற்காக தலை குனியும்போது, கயிறு மூலம் பின்னால் இழுக்கப்படுவார். ஆனாலும், சாமியாடி அந்தக் கோழியைத் தின்றாக வேண்டும். இல்லையேல், அவர் சாமியே இல்லையென்று அனுமானிக்கப்படுவார். இதேபோல், காளியாத்தா சாமியாடி, வெட்டப்பட்ட ஆட்டின் இரத்தத்தை பச்சையாகக் குடிக்க வேண்டும். இல்லையென்றால் ஊர்க்காரர்கள் அந்தச் சாமியாடியை “பச்சை”யாகத் திட்டுவார்கள். எங்கள் ஊரில் பிள்ளைமார்கள், முருகனையும், பிள்ளையாரையும், எலுமிச்சை பழத்தோடு வழிபட்டபோது, எங்கள் ஆட்களும், ஆதிதிராவிட மக்களும், பன்றி, ஆடுகளை கோயில்களில் கொன்று குவித்து வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். இருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில், ஒரு கோவிலில் ஒரு நிகழ்ச்சி - நிகழ்ச்சி நிரலில் இல்லாத நிகழ்ச்சி. ஏதோ நிகழ்ச்சி. ஏதோ ஒரு ஆடி மாதம். ஊருக்கு ஒரு புறத்தில் உள்ள ஒரு மாடன் கோவிலில் விசேஷம், கணியான் பாடுகிறார். மேளம் ஒலிக்கிறது. இரயில்வே இலாகாவில் பணிபுரியும் ஒருவர், சாமியாடத் தயார் ஆகிவிட்டார். வழக்கமாக ஆடுபவர். பொதுவாக கதாநாயக சாமி, இதர சாமிகள் ஆடி அடங்கும் போதுதான் ஆடத் துவங்கும். நான் சொல்கிறவர், அழகாக இருப்பவர். ஒல்லியான - உறுதியான உடம்பு. அவர் தலையை ஆட்டத் துவங்கியதும், அவரது சட்டையைக் கழற்றிவிட்டு, வேட்டியைத் தார்பாய்த்துவிட்டு, சந்தனத்தை அப்பினார்கள். கரத்தில், கற்பூரத் தட்டைக் கொடுத்தார்கள். கெட்டிமேளம் முழங்கியது. அவ்வளவுதான். ஆசாமி பம்பரம் போல் சுழன்றார்.

பத்து நிமிடத்திற்குள், இன்னொரு குரல் கேட்