பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

சு. சமுத்திரம் ☐

செயல்படுகிறார்கள் என்பதை சித்தரித்து வருகிறேன். இந்தப் பின்னணியில் என்னை போலீஸ் நண்பனாக அறிமுகப்படுத்தியதும், ஒருவேளை நானும் காவல்துறையினரை அவர்களது சூழல் புரியாமல் வரம்புமீறி சாடுகிறேனோ என்று என்னுள் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. சிந்தித்துப் பார்த்தபோது போலீஸ் பற்றி எனது அணுகுமுறை மேலும் வன்மையானதே தவிர மென்மையாகவில்லை.

என் வீட்டில் திருட்டு

எனது வீட்டில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு திருடு நடந்தது. ஒரு டு-யின்-ஒன், இரண்டு கைக்கடிகாரங்கள், பல்வேறு அரசாங்கம் பாஸ்களை கொண்ட லெதர் பேக், 500 ரூபாய் இரவோடு இரவாகப் போய்விட்டன. பத்திரிகைகளிலும் ‘ரேடியோ அதிகாரி வீட்டில் திருடு’ என்று பெரிய செய்தியாக வந்தது. எனக்கு பொருட்கள் திருடு போனதைவிட, நான் விமான நிலையத்திற்குள் எந்த இடத்திற்கும் செல்லக்கூடிய ஏர்போட் பாஸ், பல கேந்திரமான நிலையங்களுக்குள் நுழையக்கூடிய செய்தியாளர் பாஸ், பறிபோனதில் அதிர்ச்சியுற்றேன். யாராவது விமான நிலைய ‘பாஸை’ வைத்துக் கொண்டு அங்கே ஏதாவது கோளாறு செய்யலாம். இதனால் பேரிழப்புகூட ஏற்படலாம். ஆகையால் நான் பதறியடித்து இரண்டு ஐ.ஜிக்களுக்கு டெலிபோன் செய்தேன். அவர்களின் அறிவுரையின்படி அருகே உள்ள காவல்நிலையத்திற்கும் நேரே சென்று எழுத்து மூலமும் புகார் செய்யச் சென்றேன். நான் இன்னார் என்று டெலிபோனில் சொல்லிக் கொண்டும் திருட்டின்