பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

187

சமயம் எப்படி காய்ச்சலாம் என்ற ஒரு எண்ணத்தை கைத்தொழிலாக கற்றுக் கொடுக்காமல் சமூக பிரக்ஞையோடு இவற்றை எழுத வேண்டும். இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மாற்றுத் தொழில் கொடுத்தாலன்றி கள்ளச்சாராய காய்ச்சலை நிறுத்த முடியாது என்று காவல் துறையினரே கூறுகின்றனர். இதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

போலீஸ் நண்பன்

செங்கை மாவட்டத்தில் நடைபெற்ற இந்தக் கள்ளச்சாராய வேட்டையின் இறுதி நாளில் கைப்பற்றப்பட்ட பொருட்களைப் பார்வையிடுவதற்காக வானொலி செய்தி ஆசிரியரான எனக்கும் இந்தத் துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் திரு. அலெக்சாண்டரிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. 500க்கும் அதிகமான காவலர்கள் அணிவகுத்து நின்றனர். அவர்களுக்குப் பின்னால் கைப்பற்றப்பட்ட கள்ளச்சாராய உபகரணங்கள். என்னை அறிமுகப்படுத்திப் பேசிய, திரு. அலெக்சாண்டர் என்னை போலீஸ் நண்பன் என்று வர்ணித்தார். உடனே கைதட்டல். நான் திடுக்கிட்டேன். பல ஐ.பி.எஸ். அதிகாரிகள் எனக்கு வேண்டிய நண்பர்கள் என்றாலும், நான் அவர்களையும், இந்தக் காவல்துறையினரையும், சாடாமல் இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், போலீஸ்காரர்கள் ஏழை பாளைகளை லாக்கப்பில் என்ன பாடுபடுத்துகிறார்கள் என்பதை தமிழ் இலக்கியத்தில் என்னைவிட இன்னும் யாரும் நுணுக்கமாகவும், அழுத்தமாகவும், சித்தரிக்கவில்லை. இந்தத் தாழம்பூவிலும், காவல்துறையினர் பெரும்பாலோர் கள்ளச்சாராய ஏஜெண்டுகளாக எப்படி