பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

சு. சமுத்திரம் ☐

மக்கள் தாழி மாதிரியான கெட்டியான பானைகள் கைப்பற்றப்பட்டன. கள்ளச்சாராயம் கடத்திய இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு காரின் டிக்கி சாராய தொட்டி மாதிரியான அமைப்பாக மாற்றப்பட்டிருந்தது. காய்ச்சும் பானை மூன்று வகை. கீழே ஒன்று, மத்தியில் ஒன்று. அந்த மத்திக்கும் மத்தியில் ஒரு ஈயப் பாத்திரம்; அதற்கு மேலே குளிா்ந்த நீரைக் கொண்ட ஒரு பானை, கீழே ஊறல். நெருப்பினால் அது ஆவியாகி குளிர்ந்த பானையில் பட்டு சாராயமாக மாறி அலுமினியத் தட்டில் உள்ள டியூப் மூலம் வெளியே கேனில் வந்து விழும். இந்தத் தொழிலில் இப்போது விஞ்ஞான நுட்பம் புகுந்திருப்பதாகவும் கேள்வி. குளிர்ந்த பானையில் தண்ணீரை அது சூடானதும் அடிக்கடி மாற்ற வேண்டும். அது சிரமம் என்று, இப்போது பம்ப்செட் தண்ணீரையே வாய்க்கால் மாதிரி அந்தப் பானை வழியாக விடுகிறார்களாம். ஊறல் கிக்காக 15 நாள் ஆகும். ஆனால் ஒரே நாளில் காரியத்தை முடிப்பதற்காக சில விஷங்களின் ஒரு சில சொட்டுக்களை விட்டு ஒரே நாளில் தேற்றி விடுகிறார்களாம். இந்த விஷச் சொட்டுக்கள் அதிகமானால் தான் அது விஷ சாராயமாக மாறுகிறதாம். ஸ்பெஷல் சாராயத்திற்கு ஊமத்தை விதைகளை ஒரு துணியில் போட்டு சாராயத்தின் மேல் ஒத்தடம் கொடுப்பார்களாம். ஒரு கிராமத்தில் ஒரு கிணற்றில் முக்காலடி உயரத்திற்கு சாராயத்தையே ஊற்றி வைத்திருந்தார்களாம்.

இத்தகைய அனுபவங்களை தாழம்பூவை நாவலாக்கும்போது விரிவுபடுத்தி எழுதினேன். அதே